/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஜன 28, 2024 06:58 AM

திண்டிவனம், திண்டிவனத்தில் பருவதராஜகுல மீனவர் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திண்டிவனம் அங்காளம்மன் கோவில் எதிரில், திண்டிவனம் பருவதராஜகுல மீனவர் சமுதாய பொது சேவை அறக்கட்டளை சார்பில், குடியரசு தினத்தை முன்னிட்டு, நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் 254 பேருக்கு போர்வை, அரிசி ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை நடந்தது.
விழாவிற்கு, அறக்கட்டளை தலைவர் செல்வம், மாநில நிர்வாகிகள் சரவணன், ராகவன் தலைமை தாங்கினர். அறக்கட்டளை நிறுவனர் சாமிக்கண்ணு,நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.
இதில் திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், அறக்கட்டளை நிர்வாகிகள் மகேந்திரன், சாந்தகுமார், சீனுவாசன், புஷ்பராஜ், விநாயகம், சேகர், முத்து, ரமேஷ், கவுன்சிலர்கள் பிர்லாசெல்வம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.