ADDED : ஜன 03, 2024 12:13 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் 24 காவலர்களுக்கு, ஏட்டு பதவி உயர்வு வழங்கி எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 15 ஆண்டுகளாக காவலர்களாக பணிபுரிந்து வந்த போலீசாருக்கு, தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்கள் தேவநாதன், வெங்கடேசன், நிர்மலா, பாலமுருகன்.
மரக்காணம் காவல் நிலைய காவலர் தனுஷ், கண்டமங்கலம் ரூபி ஸ்டெல்லா, விக்கிரவாண்டி திவ்யா, காணை சத்தியப்பிரியா உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 24 காவலர்களுக்கு, தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு அளித்து, எஸ்.பி., சசாங்சாய் உத்தரவிட்டுள்ளார்.