/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் வழங்கல்பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் வழங்கல்
பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் வழங்கல்
பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் வழங்கல்
பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் வழங்கல்
ADDED : ஜன 10, 2024 11:09 PM

திண்டிவனம்,: திண்டிவனத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்களை, அமைச்சர் வழங்கினார்.
திண்டிவனம் நேருவீதியிலுள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு ரூ.ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்களை நேற்று அமைச்சர் மஸ்தான் பயனாளிக்கு வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில், திண்டிவனம் நகர்மன்ற தலைவர் நிர்மலா, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் சுவர்ணலட்சுமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் இளஞ்செல்வி, திண்டிவனம் கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் யசோதா, திண்டிவனம் நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், நகர துணை செயலாளர் கவுதமன் , நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி, கவுன்சிலர்கள் சந்திரன், ஷிபியுல்லா, பாஸ்கரன் முன்னாள் கவுன்சிலர் சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜெயபுரம்
ஜெயபுரம் பிரதான சாலையிலுள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி 25 வது வார்டு தி.மு.க.,கவுன்சிலர் ரேகாநந்தகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட முன்னாள் தி.மு.க.,துணை செயலாள் அசோகன் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினர்.
இதில் வார்டு தி.மு.க.,நிர்வாகிகள் சாமி, ராஜா, சபாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.