/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பொங்கல் சிறப்பு சந்தை: ரூ.4 கோடிக்கு ஆடு விற்பனைபொங்கல் சிறப்பு சந்தை: ரூ.4 கோடிக்கு ஆடு விற்பனை
பொங்கல் சிறப்பு சந்தை: ரூ.4 கோடிக்கு ஆடு விற்பனை
பொங்கல் சிறப்பு சந்தை: ரூ.4 கோடிக்கு ஆடு விற்பனை
பொங்கல் சிறப்பு சந்தை: ரூ.4 கோடிக்கு ஆடு விற்பனை
ADDED : ஜன 13, 2024 07:33 AM

செஞ்சி : செஞ்சியில் நேற்று நடந்த வார சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. வெளி மாநிலங்களில் இருந்து ஆடுகள் வந்ததால் வீலை வீழ்ச்சியடைந்தது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று பொங்கல் சிறப்பு சந்தையாக நடந்தது.
அதிகாலை 4:00 மணிக்கு துவங்கிய சந்தையில், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலுார் மாவட்டங்களில் இருந்தும் தமிழகத்தையொட்டி உள்ள கர்நாடக மாநில கிராமங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் 6000க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
கர்நாடகா மாநில ஆடுகள் வரத்தால், விலை வழக்கத்தைவிட வீழ்ச்சி அடைந்தது. ஆடுகளின் எடைக்கு ஏற்ப ரூ. 5,000 முதல் 15 ஆயிரம் வரை விலைபோனது. காலை 9:00 மணிக்குள் 4 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும், பொங்கல் சந்தை என்பதால் பொங்கல் பண்டிகைக்கு தேவையான மஞ்சள், கரும்பு, பூசணிக்காய், காய்கறிகள், கால்நடைகளுக்கு தேவையான கயிறுகள், கழுத்து மணிகள், பெயின்ட் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனையும் ஜேராக நடந்தது.