Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திருவெண்ணெய்நல்லுாரில் பொங்கல் பரிசு வழங்கல்

திருவெண்ணெய்நல்லுாரில் பொங்கல் பரிசு வழங்கல்

திருவெண்ணெய்நல்லுாரில் பொங்கல் பரிசு வழங்கல்

திருவெண்ணெய்நல்லுாரில் பொங்கல் பரிசு வழங்கல்

ADDED : ஜன 10, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருவெண்ணெய்நல்லுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் நடைபெற்ற விழாவிற்கு கூட்டுறவு சங்க செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணை சேர்மன் ஜோதி, கவுன்சிலர்கள் செந்தில்முருகன், ரஹமத்துன்னிசா ஷாஜகான் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கணேசன் வரவேற்றார்.

விழாவில் பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், ரூ.1000 உட்பட பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

வார்டு கவுன்சிலர்கள் பாக்கியராஜ், பாபு, அழகு, விருத்தம்பாள் நாவன், அரங்கராஜன், ரகு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட ஐ.டி., பிரிவு துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ், நகர இளைஞரணி செயலாளர் சுரேஷ், நிர்வாகிகள் நாசர், ரமேஷ், முன்னாள் நகர செயலாளர் செல்வம், சதாம், சுலைமான், பரசுராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us