ADDED : செப் 08, 2025 03:07 AM
விழுப்புரம்: வளவனுார் அருகே காணாமல் போன சிறுவன் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வளவனுார் அடுத்த குடிமியான்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் மகன் புகழ், 17; இவர், 10ம் வகுப்பு படிப்பு வருகிறார். பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தவர் நேற்று முன்தினம் மொபைல் போன் பார்ப்பதில் அவருக்கும் அவரது தம்பிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
புகழை வீட்டிலிருந்தவர்கள் கண்டித்ததால், கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.