/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பா.ம.க., பிரமுகர்கள் மீது போலீஸ் வழக்குபா.ம.க., பிரமுகர்கள் மீது போலீஸ் வழக்கு
பா.ம.க., பிரமுகர்கள் மீது போலீஸ் வழக்கு
பா.ம.க., பிரமுகர்கள் மீது போலீஸ் வழக்கு
பா.ம.க., பிரமுகர்கள் மீது போலீஸ் வழக்கு
ADDED : ஜன 25, 2024 05:27 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் மக்களுக்கு இடையூறாக கொடி கட்டியதாக பா.ம.க., பிரமுகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஆனந்த் தலைமையிலான போலீசார், நேற்று நேருஜி சாலை, கிழக்கு பாண்டி ரோட்டில் ரோந்து சென்றனர்.
அங்கு, அரசு அனுமதியின்றியும், போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் இடதுபுறத்தில் திருமண நிகழ்ச்சிக்கு கொடி கட்டியதாக, பா.ம.க., ஒன்றிய செயலாளர் ஞானவேல், வெங்கடேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.