/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திருநாவலுார் ஒன்றியத்தை விழுப்புரத்துடன் இணைக்க கோரி கலெக்டரிடம் மனுதிருநாவலுார் ஒன்றியத்தை விழுப்புரத்துடன் இணைக்க கோரி கலெக்டரிடம் மனு
திருநாவலுார் ஒன்றியத்தை விழுப்புரத்துடன் இணைக்க கோரி கலெக்டரிடம் மனு
திருநாவலுார் ஒன்றியத்தை விழுப்புரத்துடன் இணைக்க கோரி கலெக்டரிடம் மனு
திருநாவலுார் ஒன்றியத்தை விழுப்புரத்துடன் இணைக்க கோரி கலெக்டரிடம் மனு
ADDED : ஜன 04, 2024 03:38 AM

விழுப்புரம்; விழுப்புரத்துக்கு அருகில் உள்ள திருநாவலுார் ஒன்றியத்திற்குட்பட்ட 44 ஊராட்சிகளையும், விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தி, அப்பகு மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து, திருநாவலுார் வட்டாரத்தைச் சேர்ந்த, விழுப்புரம் மாவட்ட இணைப்புக்குழு பிரதிநிதிகள், பொது மக்கள் நேற்று காலை, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு கடந்த 2019ம் ஆண்டு நிர்வாக காரணங்களுக்காக, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஏற்படுத்தியது. அதில், திருவெண்ணை நல்லுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சில கிராமங்கள் மற்றும் திருநாவலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சில கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைத்தனர்.
அதனை எதிர்த்து, பொது மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். பின் வருவாய்துறை சார்பில் மக்கள் கருத்துகேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதன்பிறகு, வருவாய்த்துறை ஆணையர் உத்தரவின்பேரில், திருவெண்ணைநல்லுார் ஒன்றியத்தை மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் சேர்த்தனர்.
ஆனால், மிக அருகில் உள்ள திருநாவலுார் ஒன்றியத்தை சேர்க்காமல் திருநாவலுார் ஒன்றியத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்த்துவிட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட திருநாவலுார் ஒன்றிய மக்கள், பல போராட்டம் நடத்தி மனுக்கள் அளித்தனர். அரசு அலுவலகம், அதிகாரிகளை சந்திக்க தற்போது, கள்ளக்குறிச்சிக்கு 70 கி.மீ செல்ல வேண்டியுள்ளது.
இதனால், திருநாவலூர் மக்கள் தவிக்கின்றனர்.
எனவே 25 கி.மீ தொலைவில் உள்ள விழுப்புரம் மாவட்டத்துடன், திருநாவலுார் ஒன்றியத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்தனர்.