/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மரபணு திருத்த புதிய நெல்லுக்கு அரசு தடை விதிக்கக் கோரி மனு மரபணு திருத்த புதிய நெல்லுக்கு அரசு தடை விதிக்கக் கோரி மனு
மரபணு திருத்த புதிய நெல்லுக்கு அரசு தடை விதிக்கக் கோரி மனு
மரபணு திருத்த புதிய நெல்லுக்கு அரசு தடை விதிக்கக் கோரி மனு
மரபணு திருத்த புதிய நெல்லுக்கு அரசு தடை விதிக்கக் கோரி மனு
ADDED : மே 21, 2025 05:21 AM

விழுப்புரம் : தமிழகத்தில் மரபணு திருத்தப்பட்ட புதிய நெல் ரகங்களுக்கு, அரசு தடை விதிக்க வேண்டும் என, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் கலிவரதன், செயலாளர் முருகையன் தலைமையில், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்த விவசாயிகள், மனித குலத்திற்கு எதிரான புதிய மரபணு திருத்த விதை நெல்லுக்கு, மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
பின்பு கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்; மரபணு திருத்தப்பட்ட பூசா டி.எஸ்.பி., மற்றும் கமலா 100 டி.ஆர்.ஆர்., என்ற புதிய நெல் ரகங்கள், தனியார் கார்ப்பரேட் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயத்தை அரசு ஊக்கப்படுத்தி வரும் நிலையில், தற்போது அவசர கதியில், மரபணு திருத்தப்பட்ட இரண்டு புதிய நெல் ரகங்களை அறிமுகம் செய்துள்ளனர்.
மலட்டு தன்மையை ஏற்படுத்தும் மரபணு திருத்த புதிய விதை விற்பனைக்கு அனுமதிக்க கூடாது. தமிழக அரசு சிறப்பு தணிக்கை குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.