/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காகுப்பம், எருமனந்தாங்கல் ஏரியில் கலெக்டர் ஆய்வு: சீரமைக்க நடவடிக்கை காகுப்பம், எருமனந்தாங்கல் ஏரியில் கலெக்டர் ஆய்வு: சீரமைக்க நடவடிக்கை
காகுப்பம், எருமனந்தாங்கல் ஏரியில் கலெக்டர் ஆய்வு: சீரமைக்க நடவடிக்கை
காகுப்பம், எருமனந்தாங்கல் ஏரியில் கலெக்டர் ஆய்வு: சீரமைக்க நடவடிக்கை
காகுப்பம், எருமனந்தாங்கல் ஏரியில் கலெக்டர் ஆய்வு: சீரமைக்க நடவடிக்கை
ADDED : மே 21, 2025 06:50 AM

விழுப்புரம் : காகுப்பம், எருமனந்தாங்கல் ஏரியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், ஏரியை துார்வாரி சீரமைக்க ஆலோசனை வழங்கினார்.
விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், நேற்று மதியம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள மைதானம், விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் விடுதி போன்வற்றின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து, அருகே உள்ள எருமனந்தாங்கல் ஏரி, காகுப்பம் ஏரிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின்பு அவர் கூறியதாவது; விளையாட்டரங்கில் மழைநீர் தேங்காதவாறு, மழைநீர் வடிகாலினை துார்வாரி, தங்குதடையின்றி வெளியேற ஆலோசனை வழங்கப்பட்டது. அங்குள்ள பேஸ்கட் பால் மைதானம் மற்றும் கபடி மைதானம் தொடர்ந்து நல்ல நிலையில் உள்ளவாறு பராமரிக்க அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விடுதியில், 60 வீரர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். வீரர்களுக்கு அரசால் வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. படுக்கை அறை, குடிநீர், கழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்க அறிவுரை வழங்கப்பட்டது. எருமனந்தாங்கல், காகுப்பம் ஏரியில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, ஏரியை துார்வாரவும், கரைகள் பலப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது என கூறினார். நகராட்சி ஆணையர் வசந்தி, விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், தாசில்தார் கனிமொழி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.