Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் மின்துறை குறைகளுக்கு உடனடி தீர்வு

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் மின்துறை குறைகளுக்கு உடனடி தீர்வு

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் மின்துறை குறைகளுக்கு உடனடி தீர்வு

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் மின்துறை குறைகளுக்கு உடனடி தீர்வு

ADDED : ஜன 04, 2024 03:37 AM


Google News
விழுப்புரம்; விழுப்புரம், திண்டிவனம், கண்டமங்கலம் பகுதிகளில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் வந்த மின்துறை புகார்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டது.

விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவ.22 முதல் டிச.29ம் தேதி வரை, முதல்வரின் முகவரித்துறையில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வுகாணும் வகையில், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது. நவ.22ம் தேதி விழுப்புரம் லோகலட்சுமி திருமண மகாலிலும், செஞ்சி சமுதாய கூடத்திலும், டிச.18 விழுப்புரம் சண்முகா திருமண மண்டபம், அனந்தபுரம் சமுதாய கூடம், டிச.19ல் விழுப்புரம் குரு திருமண மண்டபம், திண்டிவனத்தில் மயிலம் முருகர் திருமண மண்டபத்திலும், டிச.20ல் அரகண்டநல்லுார் ஜெ.பி.மகால், டிச.21 விக்கிரவாண்டி சுபம் திருமண மண்டபம், மயிலம் முருகர் திருமண மண்டபம் திண்டிவனம், டிச.22 கலா திருமண நிலையம் கோட்டக்குப்பம், டிச.26 வளவனூர் மூகாம்பிகை திருமண மண்டபம், டிச.27 விழுப்புரம் ஆனந்தா மண்டபம், திண்டிவனம் கே.ஆர்.எஸ். மண்டபம், ஜாமியா மஹால் கோட்டகுப்பம், டிச.28 விமலா மண்டபம் திண்டிவனம், மரக்காணம் விஜயா மகால், டிச.29ல் ஏ.எஸ்.ஜி., சாந்தா மஹால் விழுப்புரம், திருவெண்ணைநல்லூரிலும் முகாம் நடந்தது.

இந்த முகாம்களில், மின்வாரியம் குறித்து, பொது மக்களிடம் இருந்து 808 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 216 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

மேலும், பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனே தீர்வுகாணப்பட்டு வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us