Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தெளிவு கிடைத்தது

நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தெளிவு கிடைத்தது

நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தெளிவு கிடைத்தது

நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தெளிவு கிடைத்தது

ADDED : ஜூன் 23, 2025 05:33 AM


Google News
Latest Tamil News

வழிகாட்டி ஒரு நல்ல வாய்ப்பு


அடுத்த என்ன படிக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கல்லுாரியை தேர்வு செய்ய இந்த வழிகாட்டி நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. திறனை வளர்ப்பது மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கினர். சிறந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.

-சுபவி, விழுப்புரம்.

மேற்படிப்பு குழப்பத்திற்கு தீர்வு


பிளஸ் 2 முடித்ததற்கு பின், மேற்படிப்பை எப்படி தேர்வு செய்வது என தெரியாமல் குழப்பமாக இருந்தது. இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் என்ன பாடப்பிரிவு எடுத்தால் வேலை கிடைக்கும் என சிறந்த முறையில் ஆலோசனை வழங்கினர். பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில் இருந்த குழப்பம் தீர்ந்தது. கல்லுாரி தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்தனர்.

-தீபிகா, விழுப்புரம்.

திறமையை வளர்க்க ஆலோசனை


'தினமலர்' நாளிதழ் வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் குழப்பத்துடன், வந்தேன். இங்கு வந்த பிறகு என்ன பாடப்பிரிவு எடுக்கலாம், திறமைகளை வளர்த்து கொள்வது குறித்து தெளிவாக கூறினர். இதனால், குழப்பத்திற்கு தெளிவு கிடைத்தது. என்ன படித்தால், வாழ்க்கையில் முன்னேறலாம் என்பது குறித்து மிகவும் அருமையாக விளக்கினர். மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

-ஜீவா, புதுச்சேரி.

வழிகாட்டியால் முழுமையான தெளிவு


ஏரோனாடிக் படிக்க வேண்டும் என்பது எனக்கு சிறிய வயதில் இருந்து ஆசை. 'தினமலர்' வழிகாட்டியில், பங்கேற்ற பிறகு மேற்படிப்பில் அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்து முழுமையான தெளிவு கிடைத்து விட்டது. இந்த நிகழ்ச்சி, மாணவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக உள்ளது. திறமையை வளர்த்துக் கொண்டால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெளிவாக எடுத்துக்கூறினர்.

-பிரித்திவிராஜ்,

ஏ.கூடலுார், விழுப்புரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us