/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திறமையை வளர்த்தால் மட்டுமே வேலை கிடைக்கும் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேச்சு திறமையை வளர்த்தால் மட்டுமே வேலை கிடைக்கும் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேச்சு
திறமையை வளர்த்தால் மட்டுமே வேலை கிடைக்கும் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேச்சு
திறமையை வளர்த்தால் மட்டுமே வேலை கிடைக்கும் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேச்சு
திறமையை வளர்த்தால் மட்டுமே வேலை கிடைக்கும் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேச்சு
ADDED : ஜூன் 23, 2025 05:11 AM

விழுப்புரம் : 'பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய திறனை வளர்த்துக் கொண்டால், கம்பெனிகளில் மிகப்பெரிய பதவிகளுக்கு செல்லலாம்' என கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசினார்.
விழுப்புரத்தில் நடந்த 'தினமலர்' நாளிதழ் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
'ப்ராப்ளம் சால்விங் எபிலிட்டி ஸ்கில்ஸ்' எனப்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பான கேள்விகள் தான், ஐ.ஏ.எஸ்., - வங்கி தேர்வுகள், ஆர்.ஆர்.பி., தேர்வுகளில் கேட்கப்படுகிறது. மிகப்பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களாக இருக்க வேண்டுமென்றால், பிரச்னைகளுக்கு தீர்வுக்காணும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கம்பெனிகளில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால் ஆங்கிலம் பேச வேண்டும். தோற்றுப் போனவர்களுக்கெல்லாம் இதுதான் காரணம்.
தற்போதுள்ள நிறுவனங்கள் ஒருவருடைய பயோ-டேட்டாவை கேட்பதில்லை. 'லிங்க்டு இன் புரொபைல்' என்றுதான் கேட்கின்றனர். அதில் உங்கள் திறமைகளை போஸ்ட் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். படிப்போடு திறமையும், எப்படி பேச வேண்டும் என்றும் தெரிந்திருக்க வேண்டும்.
கேட் தேர்விற்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கேட் தேர்வு எழுதிய 11 ஆயிரத்து 378 பேரை மத்திய அரசு பணிக்கு எடுத்துள்ளனர். இனிமேல் மத்திய அரசு பணிக்குச் செல்ல, கேட் தேர்வு தான் முக்கியம். நல்ல கல்லுாரிகளில் படிக்க வேண்டும். சிவில் இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு அரசு வேலை இருக்கு.
கல்லுாரிகளில் முதலாம் ஆண்டிலேயே அனைத்து திறனும் இருக்க வேண்டும் என கம்பெனிகள் நினைக்கின்றனர். பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்களையே கம்பெனிகளில் தேர்வு செய்வார்கள்.
பணம் இல்லை என்றால் உங்களுடன் யாரும் வர மாட்டார்கள். கல்லுாரிகளுக்கு அட்மிஷன் போடுவதற்கு முன், நேரடியாகச் சென்று, அங்கு படிக்கும் மாணவர்களிடம் விசாரிக்க வேண்டும்.
அப்படி நல்ல கல்லுாரியில் படித்தால், நல்ல வேலை கிடைக்கும். படிக்க வேண்டும் என்றால் குப்பை தொட்டியில் உட்கார்ந்து இருந்தாலும் படிக்கலாம். திறமை இருந்தால் அனைத்து துறைகளிலும் வளரலாம்.
'தினமலர்' நாளிதழ் என்பது ஒரு பிராண்ட். அதன் வளர்ச்சி என்றும் குன்றுவதில்லை. மாணவர்கள் சிறந்த மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. பெற்றோர்கள் தான் குழந்தைகளின் சுவாமி.
கடும் போட்டியுள்ளது. ஒரு பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கு தெளிவான முடிவு எடுக்க வேண்டும். அப்படி படித்தால் நிச்சயம் சாதிக்கலாம்.
இவ்வாறு அஸ்வின் பேசினார்.