/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா
ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா
ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா
ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா
ADDED : செப் 13, 2025 06:53 AM

வானுார் : திருச்சிற்றம்பலம், இரும்பை ரோடு வலம்புரி விநாயகர் கோவில் தெருவில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, ஊராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி கட்டடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
நிகழ்ச்சியில், பி.டி.ஓ.,க்கள் சுபாஷ் சந்திரபோஸ், மணிவண்ணன், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் முருகன், கவுதம், ஒன்றிய கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன், ஊராட்சி துணைத் தலைவர் குமார், ஊராட்சி செயலாளர் ஜீவரத்தினம், வார்டு உறுப்பினர்கள் அருண், பிரபுதாஸ், சங்கீதா, ரமேஷ், மோகனபிரபா, இந்திரா, முருகவேல், வள்ளி, தனலட்சுமி, மாலதி, கணபதிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.