/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க., வை விற்றுவிட்டார் பழனிசாமி லட்சுமணன் எம்.எல்.ஏ., விமர்சனம் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க., வை விற்றுவிட்டார் பழனிசாமி லட்சுமணன் எம்.எல்.ஏ., விமர்சனம்
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க., வை விற்றுவிட்டார் பழனிசாமி லட்சுமணன் எம்.எல்.ஏ., விமர்சனம்
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க., வை விற்றுவிட்டார் பழனிசாமி லட்சுமணன் எம்.எல்.ஏ., விமர்சனம்
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க., வை விற்றுவிட்டார் பழனிசாமி லட்சுமணன் எம்.எல்.ஏ., விமர்சனம்
ADDED : ஜூன் 26, 2025 02:11 AM
விழுப்புரம்: பா.ஜ., வுடன் கூட்டணி வைத்து, பழனிசாமி, அ.தி.மு.க.,வை விலைபேசி விற்றுவிட்டதாக தி.மு.க., மாவட்ட செயலர் லட்சுமணன் எம்.எல்.ஏ., விமர்சித்தார்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், நடந்த தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பிரசார கூட்டத்தில், மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசியதாவது;
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வழிகாட்டும் நலத்திட்டங்களை தீட்டியவர். சட்டசபை தேர்தலில் 13 முறை போட்டியிட்டு சரித்திர வெற்றி பெற்றவர். திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம், மாவட்டந்தோறும் மருத்துவ கல்லுாரிகளை கொண்டு வந்தவர், உழவர் சந்தை, சமத்துவபுரம், விவசாயத்திற்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சியில் 33 சதவீதம் இடஒதுக்கீடு போன்ற சிறப்பாகன திட்டங்களை கொண்டு வந்து, தமிழகத்தை தலைநிமிர வைத்தவர் கருணாநிதி.
அவரது வழியில் முதல்வர் ஸ்டாலினும், அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியான மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால், தமிழகம் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி நிலையை தெரியாத பழனிசாமி, முதல்வரை விமர்சிக்க தகுதியற்றவர்.
மதவாத சக்தியான பா.ஜ.,விடம் கூட்டணி இல்லை என்று கூறிய அவர், தற்போது பா.ஜ., விடம் கூட்டணி வைத்து, அ.தி.மு.க.,வை விலை பேசி விற்று விட்டார்.
பா.ம.க.,வில் நடக்கும் பிரச்னைகளை மூடி மறைக்கவே அன்புமணி, தி.மு.க., மீது பழிபோடுகிறார். புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் ஒருவர், கண்ணாடி மாளிகையிலிருந்து கல் எரிவதை போல், தி.மு.க.,வை விமர்சிக்கிறார்.
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு, நிதி நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அவர்கள், ஜி.எஸ்.டி., கல்வி நிதி, தேசிய ஊரகவலை திட்ட நிதியை வழங்காமல் புறக்கணித்தாலும், தமிழக முதல்வர் ஸ்டாலின், தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மீண்டும் அவரது ஆட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.