/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தி.மு.க., பேனர் கிழிப்பு ஒருவர் கைது தி.மு.க., பேனர் கிழிப்பு ஒருவர் கைது
தி.மு.க., பேனர் கிழிப்பு ஒருவர் கைது
தி.மு.க., பேனர் கிழிப்பு ஒருவர் கைது
தி.மு.க., பேனர் கிழிப்பு ஒருவர் கைது
ADDED : ஜூன் 17, 2025 11:48 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் தி.மு.க., டிஜிட்டல் பேனரை கிழித்தவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள தி.மு.க., அலுவலகம் அருகே, கட்சியினர் சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது.கடந்த 16ம் தேதி மதுபோதையில் வந்த விழுப்புரம் கே.கே.ரோடு, அண்ணாநகரை சேர்ந்த சுகுமார், 31; பிரேம், 32; ஆகியோர் பேனரை கிழித்துள்ளனர்.
இது குறித்து, தி.மு.க., பிரமுகர் பூபாலன், 30; அளித்த புகாரின் பேரில், சுகுமார், பிரேம் ஆகியோர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, சுகுமாரை கைது செய்தனர்.