/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ப.வில்லியனூர் பெருமாள் கோவிலில் 13ம் தேதி சிரவண தீபம் ஏற்றி வழிபாடுப.வில்லியனூர் பெருமாள் கோவிலில் 13ம் தேதி சிரவண தீபம் ஏற்றி வழிபாடு
ப.வில்லியனூர் பெருமாள் கோவிலில் 13ம் தேதி சிரவண தீபம் ஏற்றி வழிபாடு
ப.வில்லியனூர் பெருமாள் கோவிலில் 13ம் தேதி சிரவண தீபம் ஏற்றி வழிபாடு
ப.வில்லியனூர் பெருமாள் கோவிலில் 13ம் தேதி சிரவண தீபம் ஏற்றி வழிபாடு
ADDED : ஜன 11, 2024 04:10 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ப.வில்லியனூர் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் 13ம் தேதி சிரவண தீபம் ஏற்றப்படுகிறது.
விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, வரும் ஜன.13ம் தேதி சனிக்கிழமை சிரவண தீபம் ஏற்றி வழிபாடு நடக்கிறது.
அன்று பிற்பகல் 2 மணிக்கு மூலவர் லக்ஷ்மி நாராயண பெருமாளுக்கும், ஸ்ரீதேவி பூதேவி உடன் உற்சவ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு புஷ்பம், துளசியால் சிறப்பு அலங்காரம் செய்து, கனகவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ தேவி பூதேவியுடன் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மாலை 4.30 மணிக்கு, கோவில் உள்புறப்பாடு நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு உற்சவர் பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் கருட கம்பத்தில் எழுந்தருளிகிறார். மாலை 5.30 மணிக்கு சிரவண தீபம் ஏற்றப்படுகிறது.