விழுப்புரம் : விழுப்புரத்தில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட பெண்ணை திட்டிய மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் சின்னப்பா லே-அவுட்டை சேர்ந்தவர் ராகேஷ் மனைவி ஷியாமா மோக்ரா,45; இவர், இங்குள்ள மனோகர் என்பவருக்கு கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி ரூ.12 லட்சம் பணத்தை கடனாக கொடுத்துள்ளார்.
இந்த பணத்தை அவர், கடந்த 27 ம் தேதி, தொலைபேசி மூலம் கேட்ட போது, மனோகரின் தாய் கள்ளக்குறிச்சி மாவட்டம், தொட்டியம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி,60; என்பவர், திட்டியுள்ளார்.
புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் லட்சுமி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.