ADDED : மே 30, 2025 02:01 AM
விழுப்புரம்:சர்ச், மசூதிகள் பட்டா இல்லாமல் இருப்பதாக மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் கூறினார்.
விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி:
மாநில சிறுபான்மையினர் ஆணையம் திருத்தியமைக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்து வருகிறோம். விழுப்புரம் மாவட்டத்தை சேர்த்து 21 மாவட்டங்களில் கள ஆய்வு முடிந்துள்ளது. ஆய்வில், முதன்மை பிரச்னையாக கபரஸ்தான் மற்றும் கல்லறை தோட்டம் அமைக்க இடம் தேவையாக இருப்பது தெரிகிறது. சர்ச், மசூதிகளுக்கு பட்டா இல்லாமல் உள்ளது.
பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரையாக கோரிக்கைகளும் வந்துள்ளது. இக்கூட்டத்தில் கணவர் இல்லாமல் குழந்தையோடு வசிக்கும் பெண் பட்டா கேட்டு, கோரிக்கை விடுத்தார். உடனடியாக கலெக்டர் வாயிலாக வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் வரப்பெற்ற கோரிக்கை மனுக்களில் 80 சதவீதத்திற்கு மேல் தீர்வு காணப்பட்டுள்ளது. வக்ப் போர்டு இடம் பிரச்னை குறித்து கோரிக்கை விடுத்தனர். வக்ப் போர்டு தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளதால், முடிந்தவுடன் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.