/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அ.தி.மு.க.,வினருக்கு புத்தாண்டு பரிசுஅ.தி.மு.க.,வினருக்கு புத்தாண்டு பரிசு
அ.தி.மு.க.,வினருக்கு புத்தாண்டு பரிசு
அ.தி.மு.க.,வினருக்கு புத்தாண்டு பரிசு
அ.தி.மு.க.,வினருக்கு புத்தாண்டு பரிசு
ADDED : ஜன 03, 2024 12:07 AM
கண்டமங்கலம் : கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கட்சியின் கிளை நிர்வாகிகளுக்கு புத்தாண்டு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் வேலு, மதிசங்கர், ஜனார்த்தனன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பேரவைச் செயலாளர் தமிழ்மணி வரவேற்றார்.
சக்கரபாணி எம்.எல்.ஏ., கட்சியின் நிர்வாகிளுக்கு வேட்டி, சட்டை, பெண் நிர்வாகிகளுக்கு புடவை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.