/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/போலி சான்றிதழ் விவகாரம் அரசு ஊழியருக்கு நுாதன தண்டனைபோலி சான்றிதழ் விவகாரம் அரசு ஊழியருக்கு நுாதன தண்டனை
போலி சான்றிதழ் விவகாரம் அரசு ஊழியருக்கு நுாதன தண்டனை
போலி சான்றிதழ் விவகாரம் அரசு ஊழியருக்கு நுாதன தண்டனை
போலி சான்றிதழ் விவகாரம் அரசு ஊழியருக்கு நுாதன தண்டனை
ADDED : ஜன 31, 2024 01:02 AM
விழுப்புரம்:சென்னை, சேலையூரை சேர்ந்தவர் வெங்கடபெருமாள். இவர், வணிகவரித் துறையில் விழுப்புரம் துணை ஆணையராக பணிபுரிந்தபோது, 2011ம் ஆண்டு மரணம் அடைந்தார்.
இவரது மகன் ராஜாபாபு, 30, கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கு விண்ணப்பித்தார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத அவர், தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கி, 2012ம் ஆண்டு வணிகவரித் துறையில் உதவியாளராக சேர்ந்தார்.
அவரின் மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மையை அறிவதற்காக, வணிகவரி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அது, போலி சான்றிதழ் என்பது தெரிந்தது.
வணிகவரித் துறை உதவி ஆணையர் சுமித்ரா , 2013ல் அளித்த புகார்படி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜாபாபுவை கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த விழுப்புரம் மாஜிஸ்திரேட் ராதிகா, குற்றம் சாட்டப்பட்ட ராஜாபாபு, தமிழக அரசின் சமூக நலத்துறை நன்னடத்தை அலுவலர் கண்காணிப்பில் மூன்று ஆண்டுகள் இருக்க உத்தரவிட்டார்.