/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/லோக்சபா பட்ஜெட் கூட்டத் தொடர் வணிகர்களோடு எம்.பி., கலந்தாய்வுலோக்சபா பட்ஜெட் கூட்டத் தொடர் வணிகர்களோடு எம்.பி., கலந்தாய்வு
லோக்சபா பட்ஜெட் கூட்டத் தொடர் வணிகர்களோடு எம்.பி., கலந்தாய்வு
லோக்சபா பட்ஜெட் கூட்டத் தொடர் வணிகர்களோடு எம்.பி., கலந்தாய்வு
லோக்சபா பட்ஜெட் கூட்டத் தொடர் வணிகர்களோடு எம்.பி., கலந்தாய்வு
ADDED : ஜன 31, 2024 12:09 AM

விழுப்புரம் : லோக்சபா பட்ஜெட் கூட்டத்தொடர் சம்பந்தமாக வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
ரவிக்குமார் எம்.பி., தலைமை தாங்கினார். பேராசிரியர் பிரபா கல்விமணி, ரபேல், செல்லத்துரை, உமாபதி, சித்திரவேல், குணவழகன், கார்கி, பெரியார், பொன்னிவளவன், விடுதலை செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், பங்கேற்ற நிர்வாகிகள் உளுந்துார்பேட்டை ரயில் நிலையத்திற்கு விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும், டைடல் பார்க், தொழிற்பூங்கா, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, நகை தொழிலாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்தல், சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்டம், வர்த்தகர்களுக்கு வங்கி கடன் ஆகிய கோரிக்கைகளை கூறினர். இந்த கோரிக்கைகளை மத்திய அரசு, மாநில அரசுகளிடம் கொண்டு செல்வதாக, ரவிக்குமார் எம்.பி., தெரிவித்தார்.