Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விரிவாக்கம் செய்யப்பட்ட செஞ்சி பஸ் நிலையம் அமைச்சர் நேரு இன்று திறந்து வைக்கிறார்

விரிவாக்கம் செய்யப்பட்ட செஞ்சி பஸ் நிலையம் அமைச்சர் நேரு இன்று திறந்து வைக்கிறார்

விரிவாக்கம் செய்யப்பட்ட செஞ்சி பஸ் நிலையம் அமைச்சர் நேரு இன்று திறந்து வைக்கிறார்

விரிவாக்கம் செய்யப்பட்ட செஞ்சி பஸ் நிலையம் அமைச்சர் நேரு இன்று திறந்து வைக்கிறார்

ADDED : ஜன 04, 2024 03:39 AM


Google News
Latest Tamil News
செஞ்சி: செஞ்சியில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பஸ் நிலையத்தை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு இன்று திறந்து வைக்கிறார்.

செஞ்சி பஸ் நிலையத்தை நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் 6.74 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்துள்ளனர். இதன் திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடக்க உள்ளது. நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்குகிறார். திறப்பு விழா ஏற்பாடுகளை அமைச்சர் மஸ்தான் ஆய்வு நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பஸ் நிலைய சிறப்பு


புதிய பஸ்நிலைய சிறப்பு குறித்து பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி கூறியதாவது.

புதிய பஸ் நிலையம் 5257 சதுர அடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 10 பேருந்துகள் நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மழையின் போது ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு பஸ் நிலையத்தின் உட்பகுதியாகவே செல்ல முடியும்.

கட்டணமில்லா கழிப்பறையும், கட்டண கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது. உணவகம், தாய்மார்கள் பாலுட்டும் அறை, காவல் உதவி மையம், ஏ.டி.எம்., மையம், நேரக்கட்டுப்பாட்டு அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, செல்போன் ரீசார்ஜ் செய்யும் வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

தடையில்லாமல் மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் வசதியும், இரண்டு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்புவரை பஸ் நிலையத்தில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கும், தற்போது பஸ் நிலையத்தை உயர்ந்தி, மழை நீர் வடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us