/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஆரோவில்லில் வெளிநாட்டவரிடம் ரூ.38 ஆயிரம் திருடிய நபர் கைதுஆரோவில்லில் வெளிநாட்டவரிடம் ரூ.38 ஆயிரம் திருடிய நபர் கைது
ஆரோவில்லில் வெளிநாட்டவரிடம் ரூ.38 ஆயிரம் திருடிய நபர் கைது
ஆரோவில்லில் வெளிநாட்டவரிடம் ரூ.38 ஆயிரம் திருடிய நபர் கைது
ஆரோவில்லில் வெளிநாட்டவரிடம் ரூ.38 ஆயிரம் திருடிய நபர் கைது
ADDED : ஜன 10, 2024 11:09 PM

வானுார்: ஆரோவில்லில் இருவேறு வெளிநாட்டினர் வீடுகளில் பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சர்வதேச நகரமான ஆரோவிலில் ரேவ் கெஸ்ட் அவுஸ் உள்ளது. இங்கு வெளிநாட்டை சேர்ந்த பால் டி பேபி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி இரவு வழக்கம் போல் வீட்டின் அறையில் துாங்கியுள்ளார்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, ஹாலில் மேஜையில் வைத்திருந்த ரூ. 2 ஆயிரம் திருடு போனது குறித்து ஆரோவில் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வந்தனர். ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது இடையஞ்சாவடி சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறவே அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் மரக்காணம் அடுத்த அனுமந்தை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர், 50; என்பதும், இவர் கடந்த 2ம் தேதி ஆரோவில்ரேவ் கெஸ்ட் அவுசில் ஒரு அறையில் இருந்து ரூ. 2 ஆயிரமும், கடந்த 6ம் தேதி ஆரோவில் கிரேட்டிவிட்டி பகுதியில் வெளிநாட்டினர் வசிக்கும் ஒரு வீட்டில் ரூ. 36 ஆயிரத்தை திருடியதும் தெரியவந்தது.
மேலும் இவர் மீது கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இரு திருட்டு வழக்கும், மரக்காணம் போலீசில் ஒரு சாராய வழக்கு இருப்பதும் தெரிய வந்தது.
அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ. 15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.