/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சங்கரமடத்தில் மகா பெரியவா ஜெயந்தி மகோற்சவம் சங்கரமடத்தில் மகா பெரியவா ஜெயந்தி மகோற்சவம்
சங்கரமடத்தில் மகா பெரியவா ஜெயந்தி மகோற்சவம்
சங்கரமடத்தில் மகா பெரியவா ஜெயந்தி மகோற்சவம்
சங்கரமடத்தில் மகா பெரியவா ஜெயந்தி மகோற்சவம்
ADDED : ஜூன் 10, 2025 10:17 PM

விழுப்புரம்; விழுப்புரம் சங்கரமடத்தில் வேத சம்ரக்ஷண ட்ரஸ்ட் சார்பில், 132வது ஆண்டு மகா பெரியவா ஜெயந்தி மகோத்சவம் நடந்தது.
காஞ்சி மகா பெரியவா பிறந்த இடமான விழுப்புரம் சங்கரமடத்தில், 132வது பிறந்தநாள் விழாவான மகோற்சவம் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, நேற்று காலை 7.30 மணிக்கு கோ பூஜை நடந்தது.
தொடர்ந்து, கணபதி பூஜை, கலச பூஜை, ஹோமங்களும், ஸ்ரீ மகா ருத்ர ஏகாதசினி ஹோமம் நடந்தது. இதில், 15 வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டனர். சங்கரமடத்தில், வேதங்களை முழுவதுமாக பயின்று செல்லும் மாணவர் மகேஷ்சை, பாராட்டி கவுரவிக்கப்பட்டதோடு கேடயம் வழங்கப்பட்டது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 7.00 மணிக்கு காஞ்சி மகா பெரியவா திருஉருவபடம் மற்றும் விக்ரஹத்தோடு மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, சங்கரமடம் மேலாளர் ராமமூர்த்தி மற்றும் வேத சம்ரக்ஷண ட்ரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.