Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வேணுகோபாலசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

வேணுகோபாலசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

வேணுகோபாலசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

வேணுகோபாலசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

ADDED : ஜூன் 07, 2025 01:43 AM


Google News
Latest Tamil News
செஞ்சி : பெரியமூர் வேணுகோபால்சாமி கோவில் மகா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பெரியாமூர் ருக்குமணி சத்தியபாமா சமேத வேணுகோபாலசாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா, கடந்த 4 ம் தேதி மாலை 6:00 மணிக்கு யாக சாலை பிரவேசமும், கணபதி பூஜையுடன் துவங்கியது. 5ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை, அன்று மாலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது.

நேற்று காலை 7:00 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவைகள் நடந்தன. காலை 9.30 மணிக்கு கும்ப புறப்பாடும், 10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதி உலா நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us