ADDED : செப் 18, 2025 03:49 AM
அவலுார்பேட்டை: லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அவலுார்பேட்டை, முருகன் கோவில் மலை அடிவாரத்தில் லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர ராஜன் சந்தேக படும்படியாக இருந்த நபரை பிடித்து விசாரித்தார்.
அப்போது அதே ஊரை சேர்ந்த அப்துல் கலீல் மகன் அப்துல் ஷபி, 42, லாட்டரி விற்பது தெரியவந்தது.
அவரிடமிருந்த, 15 சீட்டுகளையும், 500 ரூபாயையும் போலீசார் கைப்பற்றி, வழக்கு பதிந்து முகமது ஷபியை கைது செய்தனர்.