ADDED : செப் 10, 2025 11:09 PM
செஞ்சி: வடதரம் முத்துமாரியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
செஞ்சி அடுத்த திருவம்பட்டு, வடதரம் பிள்ளையார், பெரியாண்டவர், பூவாடைக்காரியம்மன், முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
இதை முன்னிட்டு இன்று மாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், முதல் கால யாக சாலை பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடக்கின்றன.
நாளை காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, 8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும், 9:00 மணிக்கு பிள்ளையாருக்கும், 9:15 மணிக்கு பெரியாண்டவருக்கும், 9:30 மணிக்கு பூவாடைக்காரியம்மனுக்கும், 10:00 மணிக்கு முத்துமாரியம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.