/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வல்லம் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு வல்லம் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
வல்லம் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
வல்லம் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
வல்லம் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு
ADDED : செப் 10, 2025 11:10 PM

செஞ்சி: வேளாண் துறை மூலம் நடந்து வரும் பணிகளை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
வல்லம் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை வேளாண் துணை இயக்குனர் ஆனந்தி ஆய்வு செய்தார்.
மருதேரி, மேல்சித்தாமூர், சேர்விளாகம் பகுதியில் பயிர் சாகுபடி பரப்பை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி மற்றும் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் தக்கை பூண்டு சாகுபடி செய்த நிலங்களை பார்வையிட்டார். மேலும், தக்கை பூண்டு விதைகளை வழங்கினார்.
தொடர்ந்து, நெல் விதைப்பண்ணை வயல்களை ஆய்வு செய்தார். விரைவாக விதை சான்று அட்டை பொருத்தி விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய அறிவுறுத்தினார். விவசாயிகளுக்கு தேவையான நுண் உரங்கள், உயிர் உரங்கள், நெல் மணிலா, உளுந்து, பணிப்பயிர் விதைகள் மற்றும் வேப்ப எண்ணெய் உள்ளிட்ட அங்கக இடு பொருட்களை குறித்த நேரத்தில் வினியோகிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில், வல்லம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சரவணன், துணை வேளாண் அலுவலர் கோவிந்தராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபாஷ் சந்திர போஸ், உதவி விதை அலுவலர் பிரபாகரன், உதவி வேளாண் அலுவலர்கள் தமிழரசி, மஞ்சு, அபிராமி, ஜீவா, வாசமூர்த்தி, மீனாட்சி, உமா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.