/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சென்னைக்கு கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைதுசென்னைக்கு கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது
சென்னைக்கு கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது
சென்னைக்கு கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது
சென்னைக்கு கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது
ADDED : பிப் 25, 2024 05:18 AM

மரக்காணம் : கேரளாவில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி மதுவிலக்கு சோதனைச் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து இ.சி.ஆர்., வழியாக சென்னை நோக்கிச் சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் பஸ்சிலிருந்து இறங்கி தப்பியோட முயன்றார்.
போலீசார் அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், கேரள மாநிலம், எர்ணாகுளம், டான் போஸ்கோ பகுதியைச் சேர்ந்த ஜான்சன் மகன் அந்தோணி ஸ்டீபன், 22; என்பதும் சென்னையில் கல்லுாரிகளில் படிக்கும் கேரள மாநில மாணவர்களுக்கு விற்க எடுத்துச் சென்றது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, அந்தோணி ஸ்டீபனை கைது செய்தனர். அவர் கடத்தி வந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.