/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சாலை போட கொட்டிய ஜல்லி மாயம் ஒலக்கூர் காவல் நிலையத்தை தி.மு.க.,வினர் முற்றுகைசாலை போட கொட்டிய ஜல்லி மாயம் ஒலக்கூர் காவல் நிலையத்தை தி.மு.க.,வினர் முற்றுகை
சாலை போட கொட்டிய ஜல்லி மாயம் ஒலக்கூர் காவல் நிலையத்தை தி.மு.க.,வினர் முற்றுகை
சாலை போட கொட்டிய ஜல்லி மாயம் ஒலக்கூர் காவல் நிலையத்தை தி.மு.க.,வினர் முற்றுகை
சாலை போட கொட்டிய ஜல்லி மாயம் ஒலக்கூர் காவல் நிலையத்தை தி.மு.க.,வினர் முற்றுகை
ADDED : பிப் 25, 2024 05:22 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாலை போட கொட்டப்பட்ட ஜல்லிகள் மாயமானது குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க.,வினர் ஒலக்கூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
திண்டிவனம், ஒலக்கூர் அடுத்த ஏப்பாக்கம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலை உட்பட 7 பணிகள் நடந்தது. இந்த பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த தேவதாஸ் உத்தரவின் பேரில் ஏப்பாக்கம் ஊராட்சி கிளார்க்கிடம் ஒப்படைக்கப்பட்டது.
பணிகள் ஒதுக்கீடு குறித்து தி.மு.க., வைச் சேர்ந்த ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் மற்றும் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்களின் கவனத்திற்கு வரவில்லை.
இதற்கிடையே தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஜனார்த்தனன் ஒதுக்கீடு செய்த பணியில் ஒரு வேலையை கிளார்க்கிடம் கேட்டு, சாலை போடுவதற்காக 4 நாட்களுக்கு முன் ஏப்பாக்கம் கிராமத்தில் ஜல்லி கொட்டியுள்ளார். ஆனால், அந்த ஜல்லிகள் திருடு போயின.
இதுகுறித்து ஒலக்கூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம், ஏப்பாக்கம் ஊராட்சி தலைவர் பாபு உட்பட 3 பேர் மீது ஜனார்த்தனன் புகார் கொடுத்தார்.
இந்நிலையில், புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று காலை 11:30 மணியளவில், ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் தலைமையில், துணைச் சேர்மன் ராஜாராம், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் ஒலக்கூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது.
இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தி, புகார் குறித்து இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், 12:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.