ADDED : பிப் 25, 2024 05:16 AM

திண்டிவனம், : ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் சார்பில், தாதாபுரம், வெள்ளிமேடு பேட்டை ஆகிய இடங்களில் கட்சிக் கொடி ஏற்றி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒலக்கூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் ரங்கநாதன், ஒன்றிய நிர்வாகிகள் சீனு, சீனுவாசன், அலெக்சாண்டர், பன்னீர், விஸ்வா, ஜெகதீன், ஒன்றிய ஐ.டி., பிரிவு தலைவர் கோவிந்தசாமி, ஆதம், சந்திரசேகர், தனுசு, தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.