/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பொங்கல் தொகுப்பு வழங்கல் கண்காணிப்பு அதிகாரி ஆய்வுபொங்கல் தொகுப்பு வழங்கல் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
பொங்கல் தொகுப்பு வழங்கல் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
பொங்கல் தொகுப்பு வழங்கல் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
பொங்கல் தொகுப்பு வழங்கல் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
ADDED : ஜன 11, 2024 04:11 AM

வானூர்: நெசல் கிராமத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதை, கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
வானுார் அடுத்த நெசல் கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் மற்றும் பரிசுத்தொகுப்புடன் கூடிய வேட்டி, சேலை வழங்கி வருகின்றனர்.
இதனை நேற்று உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர் சஹாய் மீனா, கலெக்டர் பழனி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின், அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினர். நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதா தேவி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் இளஞ்செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.