Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 88வது ஆண்டு நிறுவன விழா

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 88வது ஆண்டு நிறுவன விழா

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 88வது ஆண்டு நிறுவன விழா

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 88வது ஆண்டு நிறுவன விழா

ADDED : பிப் 11, 2024 10:17 PM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: விழுப்புரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 88 வது ஆண்டு நிறுவன தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவை யொட்டி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. நகர்புற ஆரம்ப சுகாதார மையம் டாக்டர் ராவணன் தலைமை தாங்கினார். உதவி மேலாளர் ஜெரால்டு ஆனந்து வரவேற்றார்.

முதுநிலை மேலாளர் கீதா முன்னிலை வகித்தார். மேலாளர் சுனில்குமார் வங்கியின் வரலாறு பற்றி சிறப்புரையாற்றனார். மேலாளர் வர்ஷா வாழ்த்துரை வழங்கினார். ஓய்வு பெற்ற எஸ்.பி., புருஷோத்தமன் வாடிக்கையாளர் உரையாற்றினார்.

முகாமில் பங்கேற்றோருக்கு, ரத்த அழுத்தம், சக்கரை அளவு, பெண்களுக்கு கருப்பை ஆகியவற்றை நகர்புற ஆரம்ப சுகாதார மைய டாக்டர்கள் பரிசோதனை செய்து உரிய மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

இதில், 88 புதிய வாடிக்கையாளர்கள் வரவேற்கப்பட்டதோடு, கவுரவப்படுத்தப்பட்டது.

விழாவில் தென்மங்கலம் பால் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.27 லட்சம் கடன் தொகை வழங்கப்பட்டது.இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் விஷன், மிஷன் மற்றும் இலக்குகள் பகிர்வு செய்யப்பட்டது. உதவி மேலாளர் லீலாகணேஷ் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us