/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விவசாயிகளுக்கான ஊக்க நிதி திட்ட முகாம்விவசாயிகளுக்கான ஊக்க நிதி திட்ட முகாம்
விவசாயிகளுக்கான ஊக்க நிதி திட்ட முகாம்
விவசாயிகளுக்கான ஊக்க நிதி திட்ட முகாம்
விவசாயிகளுக்கான ஊக்க நிதி திட்ட முகாம்
ADDED : ஜன 05, 2024 10:14 PM
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில், விவசாயிகளுக்கான பிரதமரின் ஊக்க நிதி திட்ட சிறப்பு முகாம், அனைத்து தாலுகாக்களிலும் நடக்கிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விவசாயிகளுக்கு, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், விவசாய நிலம் உள்ள குடும்பத்திற்கு, வேளாண் இடு பொருட்களை வாங்கும் வகையில், 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 6000 ரூபாய் 3 தவணைகளில், வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், அஞ்சல் சேமிப்பு கணக்கு துவக்க அஞ்சல் துறையுடன் இணைந்து, அனைத்து தாலுகாக்களிலும் வேளாண் துறை சார்பில் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
முகாம்களில், பி.எம்., கிசான் திட்டத்தில் விடுபட்ட தகுதியான பயனாளிகளை சேர்த்தல். ஆதார் விபரங்களை புதுப்பித்தல், திருத்தம் செய்தல், நில பதிவேற்றம் செய்தல் மற்றும் விவசாய கடன் அட்டைக்கான விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன.
மேலும், விபரங்களுக்கு, விவசாயிகள் தங்களது கிராம உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.