/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திண்டிவனம் சந்தைமேட்டில் அறிவுசார் மைய திறப்பு விழாதிண்டிவனம் சந்தைமேட்டில் அறிவுசார் மைய திறப்பு விழா
திண்டிவனம் சந்தைமேட்டில் அறிவுசார் மைய திறப்பு விழா
திண்டிவனம் சந்தைமேட்டில் அறிவுசார் மைய திறப்பு விழா
திண்டிவனம் சந்தைமேட்டில் அறிவுசார் மைய திறப்பு விழா
ADDED : ஜன 05, 2024 10:27 PM

திண்டிவனம், : திண்டிவனம் சந்தைமேட்டில், ரூ.186.68 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நுாலகம் மற்றும் அறிவுசார் மைய திறப்பு விழா நேற்று நடந்தது.
திண்டிவனம் சந்தைமேட்டில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் சார்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.186.68 லட்சம் மதிப்பீட்டில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டது.
இதை நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இதை தொர்டந்து அமைச்சர் மஸ்தான் நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து மையத்தில் அமைக்கப்பட்டுள்ள நுாலகத்தை அமைச்சர் பார்வையிட்டார்.
இதில் நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி, பொறியாளர் பவுல்செல்வம், தி.மு.க.,.நகர செயலாளர் கண்ணன், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், பாபு, சத்தீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.