/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செஞ்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு அமைச்சர் மஸ்தான் வழங்கி துவக்கி வைப்புசெஞ்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு அமைச்சர் மஸ்தான் வழங்கி துவக்கி வைப்பு
செஞ்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு அமைச்சர் மஸ்தான் வழங்கி துவக்கி வைப்பு
செஞ்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு அமைச்சர் மஸ்தான் வழங்கி துவக்கி வைப்பு
செஞ்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு அமைச்சர் மஸ்தான் வழங்கி துவக்கி வைப்பு
ADDED : ஜன 11, 2024 04:15 AM

செஞ்சி: செஞ்சி, ஆலம்பூண்டி, வல்லத்தில் பொங்கல் பரிசாக ரூ. 1000 மற்றும் பொங்கல் தொகுப்பை அமைச்சர் மஸ்தான் வழங்கி துவக்கி வைத்தார்.
செஞ்சி கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷி நிகம் முன்னிலை வகித்தார். அமைச்சர் மஸ்தான் பொங்கல் தொகுப்பு மற்றும் 1,000 ரொக்கப்பணத்தை வழங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதா தேவி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் இளஞ்செல்வி, டி.எஸ்.பி., கவினா, மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
வல்லம்
வல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் பொங்கல் தொகுப்பை வழங்கினார். பி.டி.ஓ.,க்கள் ஆனந்ததாஸ், சிலம்புசெல்வன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, இளம்வழுதி, கூட்டுறவு வங்கி சங்க இயக்குநர் இளஞ்செல்வி, மாவட்ட கவுன்சிலர் அன்புச்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலம்பூண்டி
ஆலம்பூண்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் பொங்கல் தொகுப்பை வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன், கேமல், டிலைட், சீனுவாசன் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.