Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/போதிய போலீசாரின்றி இன்ஸ்பெக்டர்கள் திணறல்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலால் நெருக்கடி

போதிய போலீசாரின்றி இன்ஸ்பெக்டர்கள் திணறல்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலால் நெருக்கடி

போதிய போலீசாரின்றி இன்ஸ்பெக்டர்கள் திணறல்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலால் நெருக்கடி

போதிய போலீசாரின்றி இன்ஸ்பெக்டர்கள் திணறல்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலால் நெருக்கடி

ADDED : ஜூலை 08, 2024 04:54 AM


Google News
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி புகழேந்தி எம்.எல்.ஏ., உடல் நலமின்றி இறந்ததையொட்டி, வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி, இந்த தொகுதியில் தி.மு.க., - பா.ம.க., - நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை உட்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது அந்தந்த கட்சியினரும் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றத் துவங்கி விட்டனர்.

தி.மு.க., வேட்பாளர் சிவா தனது கூட்டணி நிர்வாகிகளோடு படைசூழ பொதுமக்களிடம் ஓட்டுகளை தீவிரமாக சேகரித்து வருகிறார்.

அதே போல், பா.ம.க., வேட்பாளர் அன்புமணி தனது கூட்டணி நிர்வாகிகளோடு ஓட்டு சேகரிக்கிறார்.

இதில், பா.ம.க., நிர்வாகிகள், சமீபத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதாக கூறி, தேர்தல் அலுவலர் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையொட்டி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் விழுப்புரம் மாவட்ட சட்டம், ஒழுங்கு போலீசார் மட்டுமின்றி மத்திய பாதுகாப்பு படை, அதிரடிப்படை என பாதுகாப்பு பணிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி அமைச்சர்கள் முகாமிட்டு ஓட்டுகேட்டு வருவதால் அவர்கள் பங்கேற்கும் கூட்டங்களுக்கும் போலீசார் பந்தோபஸ்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதனால், மாவட்டத்தில் உள்ள உள்ளூர் காவல் நிலையங்களில் வரும் புகார்களை விசாரிக்க போதுமான போலீசார் பணியில் இல்லாததால் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் திணறுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்கும் சூழலில், மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி வரை, தேர்தல் விதிமுறை மீறியதாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து, தினமும் 5 முதல் 8 விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மட்டும், விழுப்புரம் அடுத்த அயினம்பாளையத்தைச் சேர்ந்த வி.சி., பிரமுகர் சுந்தரவளவன், விழுப்புரம் கலைசெல்வன் (தி.மு.க.,) சானந்தோப்பு மதியழகன் (பா.ம.க.,) காணை அருகே ஆரியூர் காலனி ராகுல் (தி.மு.க.,) உட்பட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை பதிவு செய்யக்கூட காவல் நிலையத்தில் போலீசார் இல்லை என இன்ஸ்பெக்டர்கள் புலம்புகின்றனர்.

குறிப்பாக, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு சாராயம், மறியல் சார்ந்த பிரச்னைகளைக் கூற பொதுமக்கள் அழைக்கின்றனர்.

இந்த போனை எடுத்து தகவலை கேட்பதற்கு கூட போலீசார் பணியில் இல்லாத நிலை நீடிக்கிறது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us