ADDED : ஜூன் 06, 2025 06:48 AM
விழுப்புரம்; வானுார் அருகே கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
வானுார் அருகே தொள்ளாமூர் பகுதியை சேர்ந்தவர் நர்கீஷ், 25; லாரி டிரைவர். இவர் மனைவி சோனியா, 22; இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நர்கீஷ், மீண்டும் வரவில்லை. அவரை குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் காணவில்லை.
புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து நர்கீைஷ தேடி வருகின்றனர்.