ADDED : மே 26, 2025 12:22 AM
விழுப்புரம் : வளவனுார் அருகே கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
வளவனுார் அடுத்த பக்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பண்டரிநாதன் மகன் சரத்குமார், 28; புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் கூலி வேலை செய்து வந்தார். இவர், கடந்த 18ம் தேதி, பக்கமேடு கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவரது மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.