ADDED : ஜன 04, 2024 03:36 AM
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜமோகன் மனைவி உமாமகேஸ்வரி, 45; இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. 1 மகள் உள்ளார். இதனிடையே உமாமகேஸ்வரி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து சென்று, அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி, ராஜமோகன் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு, உமாமகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று, அவரை தாக்கி மிரட்டியுள்ளார். இது குறித்து, உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, ராஜமோகனை கைது செய்தனர்.