/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு ஒரே தவணையில் செலுத்தலாம் வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு ஒரே தவணையில் செலுத்தலாம்
வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு ஒரே தவணையில் செலுத்தலாம்
வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு ஒரே தவணையில் செலுத்தலாம்
வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு ஒரே தவணையில் செலுத்தலாம்
ADDED : செப் 02, 2025 03:48 AM
விழுப்புரம்: தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டங்களில் வீடு ஒதுக்கீடு பெற்று தவணை செலுத்தாத ஒதுக்கீடுதாரர்கள் ஒரே தவணையில் பணம் செலுத்தலாம்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டங்களில் வீடு, மனை, குடியிருப்பு ஆகிய அலகுகளில் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன், தவணை காலம் முடிந்த குடியிருப்பு திட்டங்களுக்கு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை தாமாக முன்வந்து முழுவதும் ஒரே தவணையில் செலுத்தலாம்.
ஒதுக்கீடுதாரர்களுக்கு மாதாந்திர தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கம் மீதான வட்டி, நிலத்தின் இறுதி விலை வித்தி யாசம் மீதான வட்டியை ஆண்டிற்கு 5 மாதம் மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து, அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாரிய திட்டங்களில் தவணை முறை மூலம் மனை, வீடு, குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களில் முன்பே முழு தொகையை செலுத்தியோர் தவிர மற்ற ஒதுக்கீடுதாரர்கள் மட்டும் தாங்கள் ஒதுக்கீடு பெற்ற விழுப்புரம் வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தை அணுகி, செலுத்த வேண்டிய நிலுவை தொகையை அரசாணை வெளியிட்ட நாளிலிருந்து வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஒரே தவணையாக செலுத்தி விற் பனை பத்திரம் பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.