Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சி கோட்டையில் கைடுகள் மத்திய சுற்றுலாத்துறை ஏற்பாடு

செஞ்சி கோட்டையில் கைடுகள் மத்திய சுற்றுலாத்துறை ஏற்பாடு

செஞ்சி கோட்டையில் கைடுகள் மத்திய சுற்றுலாத்துறை ஏற்பாடு

செஞ்சி கோட்டையில் கைடுகள் மத்திய சுற்றுலாத்துறை ஏற்பாடு

ADDED : செப் 02, 2025 03:47 AM


Google News
Latest Tamil News
செஞ்சி: செஞ்சி கோட்டைக்கு வரும் வெளிநாட்டு சுற் று லா பயணிகளுக்கு செஞ்சி கோட்டை குறித்து விளக்கம் அளிக்க சென்னையில் உள்ள சுற்றுலா கைடுகளை மத்திய அரசின் சுற்றுலாத் துறை களம் இறக்கியுள்ளது.

செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய மரபு சின்னமாக யுனெஸ்கோ கடந்த ஜூலை 11ம் தேதி அறிவித்தது. இதையடுத்து யுனெஸ்கோவின் பட்டியலில் செஞ்சி கோட்டை இடம் பெற்றுள்ளது.

இதனால், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செஞ்சிகோட்டைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு செஞ்சி கோட்டையின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்க தற்போது சுற்றுலா கைடுகள் இல்லை. இந்த குறையை சரி செய்ய மத்திய அரசின் சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சகம் சென்னையில் உள்ள சுற்றுலா கைடுகளை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக இத்துறையின் ஏற்பாட்டில் நேற்று சென்னை வாழ் சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தினர், அதன் தலைவர் அசோகா தலைமையில் செஞ்சி கோட்டையை பார்வையிட்டனர்.

துணை தலைவர் நிர்மலா, இணைச் செயலாளர் லாரன்ஸ், நந்தகுமார், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர்பாபு உட்பட 30க் கும் மேற்பட்ட சுற்றுலா கைடுகள் வந்திருந்தனர்.

இவர்களுக்கு செஞ்சி கோட்டையை சுற்றிக் காட்டி வரலாறு தகவல்களை வரலாற்று ஆர்வலர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முனுசாமி விளக்கி கூறினார். தென்னிந்திய நதிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் அறவாழி உடன் இருந்தார்.

இந்த குழுவினர் ராஜகிரி கோட்டை தரைதளம் உள்ளிட்ட பகுதியை பார்வையிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us