/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் இடியுடன் பலத்த மழை மக்கள் கடும் அவதி விழுப்புரத்தில் இடியுடன் பலத்த மழை மக்கள் கடும் அவதி
விழுப்புரத்தில் இடியுடன் பலத்த மழை மக்கள் கடும் அவதி
விழுப்புரத்தில் இடியுடன் பலத்த மழை மக்கள் கடும் அவதி
விழுப்புரத்தில் இடியுடன் பலத்த மழை மக்கள் கடும் அவதி
ADDED : செப் 14, 2025 08:12 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழையால், பல இடங்களில் மழை நீர் தேங்கியதோடு, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
விழுப்புரத்தில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, திடீரென காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நகரம் மற்றும் புறநகர் கிராம பகுதிகளில் ஒரு மணி நேரம் பெய்த பலத்த இடி, மின்னல், காற்றுடன் பெய்த மழையால், பல இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டது. இந்திரா நகர் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கி நின்றது.
நகராட்சி மைதானத்திலும், ரயில்வே மைதானத்திலும் மழை நீர் குளம்போல் தேங்கியது. திரு.வி.க., வீதி, நேருஜி சாலை, சென்னை சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே மழை நீர் குளம்போல் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கிக்கப்பட்டது.
மின் வெட்டால் அவதி இடியுடன் மழை பெய்ததால், விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு லட்சுமி நகர், கணேஷ் நகர், அனிச்சம்பாளையம் சுற்று பகுதியில் அதிகாலை 2:30 மணிக்கு மின் வெட்டு ஏற்பட்ட நிலையில், காலை 8:00 மணி வரை மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை.
இதேபோல காகுப்பம், கீழ்ப்பெரும்பாக்கம், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், குச்சிப்பாளையம், வழுதரெட்டி, ஜானகிபுரம், கண்டமானடி, கொளத்துார், அரியலுார், கண்டம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களிலும் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இடி தாக்கியதில், உயர் மின்னழுத்த மின் கம்பங்களில் இருந்த இன்சுலேட்டர்கள் உடைந்ததால், மின் வெட்டு ஏற்பட்டதாகவும், படிப்படியாக சரிசெய்து மின் வினியாகம் நடைபெற்றதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் நேற்று பெய்த மழை விவரம் (மி.மீ) விழுப்புரம் 68, கோலியனுார் 35, வளவனுார் 58, முண்டியம்பாக்கம் 38, மணம்பூண்டி 20, அரசூர் 10, டி.வி.நல்லுார் 12, முகையூர் 9, நேமூர் 7, கெடார் 5, சூரப்பட்டு 5, வானுார் 4, மொத்தம் 283 மி.மீ., சராசரி 14 மி.மீ.