ADDED : ஜன 07, 2024 05:25 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மளிகைக் கடையில் குட்கா பதுக்கி விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கோலியனுார் பகுதியில், குட்கா விற்பனை நடைபெறுவதாக, வளவனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் மற்றும் போலீசார், கோலியனுார் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மளிகைக் கடையில் சோதனை செய்தனர்.
அங்கு, குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 16 கிலோ 400 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை கைப்பற்றினர். மேலும், கடை உரிமையாளர் அழகுராஜன், 33; மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.