/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/நேஷனல் அகாடமியில் குரூப் 4 தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்நேஷனல் அகாடமியில் குரூப் 4 தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்
நேஷனல் அகாடமியில் குரூப் 4 தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்
நேஷனல் அகாடமியில் குரூப் 4 தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்
நேஷனல் அகாடமியில் குரூப் 4 தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : பிப் 11, 2024 10:19 PM

விழுப்புரம் : விழுப்புரம் நேஷனல் அகாடமியில் டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) பேப்பர் 1 நியமன தேர்வு மற்றும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு போட்டி தேர்வு மூலம் 1,768 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் குரூப் 4 தேர்வு மூலம் 6,244, வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் விழுப்புரம் நேஷனல் அகாடமியில் நேற்று துவங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு, நிறுவன நிர்வாகி செல்வக்குமார் தலைமை தாங்கினார். டெட் (ஆசிரியர் தேர்வு) பேப்பர் 1க்கான பயிற்சி வகுப்புகள் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களிலும், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பேட்ச் 1 திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 3.30 வரை நடக்கிறது.
பேட்ச் 2 சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் நடைபெறவுள்ளது. முதல்வர் சரவணன், தற்போது வெளியான டி.ஆர்.பி., பி.இ.ஓ., தேர்வில் மாநில அளவில் 5ம் இடத்தை பிடித்த தேர்வர் சித்ரா சிவானந்தம், டி.என்.பி.எஸ்.சி., புள்ளியியல் தேர்வில் மாநில அளவில் 8ம் இடத்தை பிடித்த அம்மச்சி, மாநில அளவில் 13வது இடம் பிடித்த ேஹமலதா, வைஷ்ணவி, கார்த்தி, சம்பத்குமார், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு மூலம் தேர்வாகிய ஜீவிதா, பிரபாவதி ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கினார்.
இதில், இந்த நிறுவன பயிற்சியாளர்கள் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட தேர்வர்கள் பலர் கலந்து கொண்டனர்.