/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/குறைகேட்புக் கூட்டம் 548 மனுக்கள் குவிந்தனகுறைகேட்புக் கூட்டம் 548 மனுக்கள் குவிந்தன
குறைகேட்புக் கூட்டம் 548 மனுக்கள் குவிந்தன
குறைகேட்புக் கூட்டம் 548 மனுக்கள் குவிந்தன
குறைகேட்புக் கூட்டம் 548 மனுக்கள் குவிந்தன
ADDED : பிப் 06, 2024 06:45 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 548 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று, மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முகாமில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், மகளிர் உரிமைத் தொகை, ஆதரவற்றோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 548 மனுக்கள் பெறப்பட்டது.
டி.ஆர்.ஓ.,க்கள் பரமேஸ் வரி, சரஸ்வதி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திர சேகர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.