ஸ்ரீராம் பள்ளியில் பசுமை தின விழா
ஸ்ரீராம் பள்ளியில் பசுமை தின விழா
ஸ்ரீராம் பள்ளியில் பசுமை தின விழா
ADDED : செப் 14, 2025 11:14 PM

திண்டிவனம்:திண்டிவனம் ஸ்ரீராம் பள்ளியின் மழலையர் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பசுமை தின நிகழ்ச்சி நடந்தது.
இயற்கையை பாதுகாப்பது என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட மோனோ ஆக்ட், ரைம்ஸ் மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் குழந்தைகள் பங்கேற்ற பசுமை தின நிகழ்ச்சி, ஸ்ரீராம் பள்ளியில் நடந்தது.
விழாவிற்கு, பள்ளி முதல்வர் நான்சி மடுலா தலைமை தாங்கினார். விழாவில் பள்ளியைச் சேர்ந்த மழலையர்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்பினர்.
விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.