ADDED : ஜன 28, 2024 07:26 AM

செஞ்சி, : ஜம்போதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் பைப் லைன் அமைக்க தீர்மானம் நிறைவேற்றினர்.
செஞ்சி ஒன்றியம் ஜம்போதி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், விழுப்புரம் மாவட்ட ஊராட்சி செயலர் ஜோதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இதில் கிராம கணக்குகள் மக்களின் ஆய்வுக்கு வைக்கப்பட்டன. ஊராட்சி செயலாளர் முத்து கலா தீர்மானங்களை வாசித்தார்.
தொடர்ந்து ஆதிதிராவிடர் காலனி பகுதியில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கவும், பழங்குடியின இருளர் குடியிருப்பு பகுதியில் குடிநீர் பைப் லைன் அமைத்து குடிநீர் வசதி செய்வது, புதிதாக திறந்தவெளி கிணறு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இதில் ஏ.பி.டி.ஓ., குமார், துணைத் தலைவர் விநாயகம் உள்ளிட்ட பலர் கொண்டனர்.