Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திண்டிவனம் நகராட்சி கமிஷனர் பதவியா தலைதெறிக்க ஓடும் அரசு அதிகாரிகள்; ஆளுங்கட்சி கோஷ்டி பூசல் எதிரொலி

திண்டிவனம் நகராட்சி கமிஷனர் பதவியா தலைதெறிக்க ஓடும் அரசு அதிகாரிகள்; ஆளுங்கட்சி கோஷ்டி பூசல் எதிரொலி

திண்டிவனம் நகராட்சி கமிஷனர் பதவியா தலைதெறிக்க ஓடும் அரசு அதிகாரிகள்; ஆளுங்கட்சி கோஷ்டி பூசல் எதிரொலி

திண்டிவனம் நகராட்சி கமிஷனர் பதவியா தலைதெறிக்க ஓடும் அரசு அதிகாரிகள்; ஆளுங்கட்சி கோஷ்டி பூசல் எதிரொலி

ADDED : செப் 09, 2025 02:25 AM


Google News
Latest Tamil News
தி ண் டிவனம் நகராட்சி கமிஷனராக வருபவர்கள் குறைந்தது ஒரு வருடம் கூட பணியில் இருப்பதில்லை. கடைசியாக கமிஷனராக இருந்த குமரன் 10 மாதம் கூட பணியில் இல்லை. ஏதாவது பிரச்னை கிளப்பி பூதாகரமாகி, கமிஷனர் இடமாற்றம் செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது.

இவ்வாறு அடிக்கடி கமிஷனர்கள் பந்தாடப்படுவதால், நகராட்சி பணிகள் ஸ்தம்பித்து விடுகின்றது.

குறிப்பாக திண்டிவனம் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் ஸ்டாண்டு கட்டும் பணி முடிந்து திறக்கப்படாமல் உள்ளது. இதுபோல் ஏராளமான பிரச்னைகள் உள்ளது.

இந்த அளவிற்கு இடியாப்ப சிக்கலில் உள்ள திண்டிவனம் நகராட்சிக்கு தற்போது, கள்ளக்குறிச்சி நகராட்சி கமிஷனர் சரவணன் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.

பொறுப்பு கமிஷன ராக இருக்கும் சரவணன் தினந்தோறும் திண்டிவனம் வந்து போக முடியாது. இதனால் கமிஷனர் முடிவு எடுக்க வேண்டிய பைல்கள் தேங்கி கிடக்கிறது.

ஊழியர்கள் சம்பளம் வாங்குவதற்கு கூட, கள்ளக்குறிச்சிக்கு சென்று கமிஷனரிடம் கையெழுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

திண்டிவனம் நகர்மன்ற தலைவராக தி.மு. க.,வை சேர்ந்த நிர்மலா ரவிந்திரன் உள்ளார்.

மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில் ஆளுங்கட்சிக்கு 26 பேர் தி.மு.க., வினர். அதில் கோஷ்டிகளும் அதிகமாக உள்ளது. அதனால், புதியதாக வருகின்ற கமிஷனருக்கு தி.மு.க., கோஷ்டி கவுன்சிலர்களை சரிகட்டுவதே பெரிய சவாலாக உள்ளது.

இதுமட்டுமின்றி தற்போது நகராட்சி ஊழியர் முனியப்பன், தி.மு.க., கவுன்சிலர் ரம்யா காலில் விழுந்த விவகாரத்தில், நகர்மன்ற தலைவர் கணவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது மட்டும் இன்றி காலில் விழுந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த நகராட்சி அதிகாரிகள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், திண்டிவனம் நகராட்சி கமிஷனராக வருவதற்கு பெரும்பாலான அதிகாரிகள் விருப்பம் தெரிவிப்பது இல்லை.

திண்டிவனம் நகராட்சி கமிஷனராக செல்கிறீர்களா என கேட்டால், பல அதிகாரிகளும் தலைதெறிக்க ஓடுகிறார்களாம்.

இந்த அளவிற்கு தி.மு.க., கவுன்சிலர்களுக்குள் இருக்கும் கோஷ்டி பூசலால் நகராட்சி முன்னேற்ற பாதையை நோக்கி செல்லவதற்கு பதிலாக அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு, முதல்வர் ஸ்டாலின் தலையீட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us